Connect with us

latest news

பிக்பாஸ் முடிஞ்சதுதான் தெரியும்.. ஆனால் அடுத்து விஜய்சேதுபதி பண்ண காரியம் தெரியுமா?

மக்கள் செல்வன்: தமிழ் சினிமாவில் மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து வந்து இன்று அனைவருமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக கமர்சியல் ஆக்சன் ஹீரோவாக மாறி இன்று திரையுலகமே ஆச்சரியமாக பார்க்கக்கூடிய ஒரு மனிதனாக வளர்ந்து நிற்கிறார்.

யாரும் பண்ணாதது: கார்த்தி தனுஷ் சசிகுமார் ஆகியோர் நடித்த படங்களில் ஒரு மூலையில் மறைந்து இருந்து பார்க்கும் ஒரு கேரக்டரில் தான் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. ஆனால் இன்று அவருடைய வளர்ச்சி அபார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது .மிகவும் எதார்த்தமான மனிதர். எதையும் மனதில் வைத்து பேசக்கூடியவர் கிடையாது. அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். இந்த அளவு ஒரு உயரத்தை அடைந்திருந்தாலும் தான் ஒரு பெரிய நடிகன் என்ற எந்த ஒரு பந்தாவும் இதுவரை அவரிடம் பார்த்ததே கிடையாது.

வடிவுக்கரசி சொன்ன சீக்ரெட்: யாரைப் பார்த்தாலும் அதிலும் குறிப்பாக தனக்கு நெருங்கியவர்கள் என்றால் அவர் கொடுக்கும் முதல் அன்பளிப்பு அவருடைய அன்பு முத்தமாகத் தான் இருக்கும். அந்த முத்தத்தை வாங்குவதற்காகவே பல பேர் போட்டி போட்டுக் கொண்டு நிற்பார்கள். இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசி விஜய் சேதுபதியை குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பல செய்திகளை பகிர்ந்து இருக்கிறார்.

மகன் போல: ஏற்கனவே விஜய் சேதுபதி என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் விஜயகாந்தை எப்படி நான் பார்க்கிறேனோ அதேபோலத்தான் விஜய் சேதுபதியையும் நான் பார்க்கிறேன் என கூறியிருக்கிறார். ஏனெனில் விஜயகாந்திடம் இருக்கும் குணாதிசயங்கள் விஜய் சேதுபதியிடமும் இருக்கின்றன. அதுவே விஜய் சேதுபதியை எனக்கு பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது .தன் மகனைப் போலத்தான் விஜய் சேதுபதியை பார்க்கிறேன் என்றும் வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 ஐ விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசன் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த சீசன் முடிந்ததும் விஜய் சேதுபதி செய்த காரியம் என்ன தெரியுமா? என வடிவக்கரசி கூறி இருக்கிறார். சீசன் முடிந்ததுமே அதில் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் சாப்பாடு போட்டாராம் விஜய் சேதுபதி. சும்மா ஒன்றும் கிடையாது. கிட்டத்தட்ட 2000 பேர் இருப்பார்கள். அத்தனை பேருக்குமே தன்னுடைய சொந்த செலவில் சாப்பாடு போட்டிருக்கிறார் என வடிவுக்கரசி அந்த பேட்டியில் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top