Connect with us

latest news

விடாமுயற்சி பார்த்து ரசிகர் கொடுத்த கமெண்ட்.. தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்த திரிஷா

விடாமுயற்சி ரிலீஸ்: உலகம் முழுவதும் நேற்று விடாமுயற்சி படம் ரிலீஸானது. படம் ரிலீஸான முதலே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால் வழக்கம் போல அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நேற்று வெளியான திரையரங்கு முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாரம் செய்ததை பார்க்க முடிந்தது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் ரிலீஸாவதால் காவல் துறையினரால் கூட அஜித் ரசிகர்களை அடக்க முடியாத சூழ் நிலை.

அஜித்தின் நடிப்பு: விடாமுயற்சி படத்தை பொறுத்தவரைக்கும் எப்பவும் போல இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் அஜித்தை மகிழ்திருமேனி காட்டியிருக்கிறார். அஜித் என்றாலே ஒரு மாஸ், ஆக்‌ஷன் என ரசிகர்களுக்கான படமாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அஜித்தின் இமேஜையே சுக்கு நூறாக்கியிருக்கிறார் மகிழ்திருமேனி. வர்றவன் எல்லாம் அடிக்கிற மாதிரி அஜித்தின் கேரக்டர் இந்தப் படத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் நேர்கொண்ட பார்வை படத்தில் எப்படி அஜித்தை வித்தியாசமான கேரக்டரில் பார்த்து ரசித்தோமோ அதே மாதிரி விடாமுயற்சி படத்திலும் அஜித்தை வேறு விதமாக பார்க்க முடிந்தது. படம் ரிலீஸ் ஆகும் நேரம் ஒரு பரபரப்பில்தான் திரையுலகமே இருந்தது. ஆனால் அஜித் போர்ச்சுக்கலில் கூலாக அவருடைய ரேஸுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் வீடியோ நேற்று வெளியாகி வைரலானது.

அனிருத் இசை: படத்தில் கூடுதல் பலமாக இருந்ததே அனிருத் இசைதான். சில இடங்களில் தொய்வு ஏற்படும் போது அனிருத்தின் இசை மற்றும் பிஜிஎம் தான் படத்தை காப்பாற்றுகின்றது. அதுவும் பத்திக்கிச்சு பாடல் திரையரங்கையே பற்ற வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் விஷுவலாக அது ஒட்டவில்லை என்றுதான் பல பேர் கருத்து தெரிவித்து வந்தனர்.

திரிஷா ஆக்டிங்: இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் திரிஷாவின் அழகு. படத்தில் அவ்வளவு அழகாக இருந்தார் திரிஷா என்றுதான் படத்தை பார்த்த பலரும் கூறி வந்தார்கள். 15 வருடத்திற்கு பின்னாடி போனால் எப்படி ஒரு அழகு பதுமையாக இருந்தாரோ அதே போல்தான் இப்பவும் இருக்கிறார். அஜித் திரிஷா காதல் காட்சி ரசிக்கும் படியாக இருந்தாலும் வயதுக்கு மீறிய காதலாக இருந்ததனால் சில இடங்களில் சிரிப்புதான் வந்தது என்றும் ரசிகர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் நேற்று திரிஷா வெற்றி திரையரங்கிற்கு விடாமுயற்சி படத்தின் முதல் ஷோவை பார்க்க வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் படம் முடிந்து திரிஷாவை அழைத்து ‘திரிஷா ஆக்டிங் சூப்பர்’ என்று சொன்னார். உடனே திரிஷா ‘ நல்லவேளை சூப்பர்னு சொல்லிட்டான்’ என உடன் வந்த தோழியிடம் சிரித்துக் கொண்டே சொன்ன வீடியோதான் வைரலாகி வருகின்றது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top