latest news
சர்வதே அளவில் வெற்றிப் பெற்ற அஜித்.. ஆனால் ரேஸ் கிடையாது! இம்புட்டு திறமைசாலியா?
ஆரம்பத்தில் அஜித் பட்ட கஷ்டம்: அஜித்தை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவருடைய பேஷனில் அதிக கவனம் செலுத்துபவராக இருக்கிறார். முதலில் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் பல கஷ்டங்களை போராட்டங்களை அவமானங்களை எல்லாம் கடந்து அவர் நினைத்த இடத்தை அடைந்தார். ஆனால் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ரேஸிலும் ஆர்வம் இருந்தது.
மாஸ் ஹீரோ: ஆரம்பத்தில் இருந்தே ரேஸிலும் பங்குகொண்டு அதிலும் எப்படியாவது தன்னுடைய லட்சியத்தை அடையவேண்டும் என போராடினார் அஜித். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு சப்போர்ட் செய்ய சரியான வழிகாட்டுதலும் பொருளாதார வசதியும் இல்லை. அதனால் சினிமாவில் முழு மூச்சாக இறங்கினார். இன்று அஜித்துக்கு என சினிமாவில் ஒரு தனி பவரே இருக்கிறது.
தொடர் வெற்றி: பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலைமையில் உள்ளார் அஜித். இதை இப்போது ரேஸுக்கு பயன்படுத்திக் கொண்டார். சமீபத்தில் நடந்த துபாய் 24 ஹெச் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு அவருடைய அணி மூன்றாவது இடம் பிடித்தது. அதனை அடுத்து போர்ச்சுக்கலில் நடைபெறும் கார் ரேஸிலும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார். அதற்கான தகுதி சுற்றிலும் வெற்றிபெற்றார் அஜித்.
சிறந்த போட்டோகிராபர்: ஒரு நடிகராக, பைக், கார் ரேசராக அஜித்தை நமக்கு நன்கு தெரியும். அதையும் தாண்டி அவர் போட்டோகிராபியிலும் சிறந்து விளங்குகிறார். அவருடைய சில புகைப்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றிருக்கிறதாம். துப்பாக்கி சுடுதலிலும் பரிசுகளை வென்றிருக்கிறார். அவருடன் போட்டி போட்ட அனைவருமே போட்டி அன்று மணிக்கணக்கில் பயிற்சி எடுத்த தொழில் முறை போட்டியாளர்கள்தான்.

ஆனால் அஜித் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக பந்தயத்திற்கு சென்று பரிசை வென்றிருக்கிறார். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் முழு மனசோடு இறங்குவதால்தான் அவருக்கு வெற்றி சாத்தியமாகிறது என ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் மகிழ்திருமேனி அஜித்தை பற்றி தெரிவித்திருந்தார்.