Connect with us

Cinema News

கடவுளே அஜித்தே! கவலை கொண்ட அஜித்.. உடனே பறந்த அறிக்கை

சமீபகாலமாக அஜித்தை பற்றி அவருடைய ரசிகர்கள் அஜித்தே கடவுளே என பொது இடங்களிலும் பல பொது விழாக்களிலும் கோஷமிட்டு கூட்டத்தில் பெரும் அளப்பறையை கூட்டி வந்தனர். இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தன .விஜய் மாநாட்டில் கூட ஒரு கோஷம் திடீரென கடவுளே அஜித்தே என கூச்சலிட்டனர்.

சமீபத்தில் கூட டிடிவி தினகரன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் திடீரென மாணவிகள் கடவுளே அஜித்தே என கத்த ஆரம்பித்தனர். என்ன நடக்கிறது என தெரியாமல் டிடிவி தினகரன் அவருடைய பேச்சை நிறுத்தி ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என கேட்டு அறிந்த பின்னர்தான் அவருக்கு விவரம் தெரியவந்தது.

அதன் பிறகு மீண்டும் அவர் பேச்சை தொடர்ந்தார். இப்படி எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறதோ அங்கு அஜித்தின் பெயரை பயன்படுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர் சில கும்பல்கள். இதைப் பற்றி அஜித் எதுவுமே கண்டுகொள்ளவில்லை. இதை நிறுத்தலாமே என அஜித் மீதும் சிலர் கடுப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென இன்று அஜித்திடமிருந்து ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் அவர் சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் க…. அஜித்தே என்று இந்த கோஷம் என்னை கவலை அடைய செய்திருக்கிறது.

எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் அஜித்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top