கேஜிஎஃப் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார். சலார் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக அஜித்தை வைத்து பிரசாந்த் நீல் படம் எடுக்கப் போவதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.
ஆனால், சில மூத்த பத்திரிகையாளர்கள் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எல்லாம் உருட்டு என்றும் கூறிவந்தனர். ஆனால், பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்றும் அதற்குப் பின்னணியில் ஒரு பிரபலம் உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது ஹைதராபாத்தில் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேக் அக்லி படத்திலும் நடிக்க உள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ள நிலையில், அஜித் அடுத்து எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
பிரசாந்த் நீலின் மச்சானும் நடிகருமான கன்னட நடிகர் ஸ்ரீ முரளி அஜித்தின் நெருங்கிய நண்பராக உள்ளார். சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் தான் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போவது உறுதி என்கிற தகவல்கள் கசிந்தன என்று கூறுகின்றனர்.
அஜித் ரசிகர்கள் தற்போது அஜித் மற்றும் பிரசாந்த் நீலின் மச்சான் ஸ்ரீ முரளி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து 1000 கோடி படம் ரெடியாகுது என அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…