Categories: Cinema News latest news

அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் ரிமாண்ட்!. அட ஜாமீன்லையும் வெளிய வரமுடியாதாம்!..

அல்லு அர்ஜூன்:

நடிகர் அல்லு அர்ஜுனை இன்று அவரது வீட்டில் தெலுங்கானா போலீஸ் நேரில் சென்று அவரை கைது செய்தது. அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .மேலும் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் ரிமாண்ட் செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ராஸ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா ௨. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதுதான்.

முதல் பாகம் வெற்றி:

முதல் பாகம் 400 கோடிக்கு மேல் வசூல் பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்கும் மிகுந்த அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருக்கிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான அன்று ரேவதி என்ற பெண் அதிகாலை காட்சியைக் காண திரையரங்குக்கு செல்ல அங்கு கூட்டம் நெரிசலில் அந்தப் பெண் சிக்கி உயிரிழந்தார். அதிகாலை காட்சியைக் காண அங்கு அல்லு அர்ஜுனும் வந்திருந்தார் .

சிறைக்காவல்:

அவரைப் பார்க்கவே ஏராளமான கூட்டம் காலையிலேயே கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் சிக்கி தான் ரேவதி என்ற 39 வயது பெண் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். கூடவே அவருடைய மகனும் அந்தக் கூட்டத்தில் சிக்கி காயமுற்ற நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது .

இந்த நிலையில் ஏற்கனவே திரையரங்கு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இன்று அவரிடம் விசாரணை செய்வதற்காக அல்லு அர்ஜுன் வீட்டிலிருந்து அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு இரண்டு மணி நேரம் விசாரணை நடந்து முடிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவு உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, திங்கட் கிழமை ஜாமீன் பெற்று அவர் வெளியே வர முடியாது என சொல்லப்படுகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்