Categories: Cinema News latest news

அய்யோ எனக்கு கல்யாணமா?.. ஆளவிடுங்கடா சாமி!.. காவ்யா மாறனுக்கு பெரிய கும்பிடு போட்ட அனிருத்!..

ராக் ஸ்டார் என தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே அனிருத்தை கொண்டாடி வருகிறது. திடீரென அனிருத்துக்கும் சன் பிக்சர்ஸ் ஓனர் கலாநிதி மாறன் மகளும் சன் ரைசர்ஸ் ஐபிஎல் அணியின் ஓனர் காவ்யா மாறனுக்கும் திருமணம் விரைவில் நடைபெற போகிறது என்றும் ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக கார் கொடுத்த கலாநிதி மாறன் இப்போ அவருடைய மகளையே தரப் போகிறார் என்றும் பயில்வான் ரங்கநாதன் வழக்கம் போல இஷ்டத்துக்கு அளந்து விட்டது பல மீடியாக்களில் செய்தியாக மாறியது.

கோடாம்பாக்கம் முழுவதுமே அனிருத் காவ்யா மாறனை திருமணம் செய்துக் கொள்ளப் போகீறார் என்றும் ஐசரி கணேஷ் மகளை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகே வியக்கும் விதமாக அம்பானி வீட்டுத் திருமணம் போல காவ்யா மாறன் திருமணம் நடைபெறும் என்றெல்லாம் அளந்து விட ஆரம்பித்தனர்.

இந்த விஷயம் அனிருத் காதுக்கே சென்ற நிலையில், சிரித்து விட்ட மனுஷன், ”Marriage ah? lol .. Chill out guys ???? pls stop spreading rumours ????????” என திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

34 வயதாகும் அனிருத், 32 வயதாகும் காவ்யா மாறனை திருமணம் செய்யப் போகிறார் என வதந்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷை அனிருத் காதலிக்கிறார் என்றும் அவரை திருமணம் செய்யப் போகிறார் என்றும் வதந்தி பரவியது.

மேலும், பாடகி ஜோனிதா காந்தி மற்றும் அனிருத் இருவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் உலா வந்தன.

Saranya M
Published by
Saranya M