யுவி கிரியேஷன்ஸ் தயாரித்து இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள காதி படத்தின் அப்டேட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.
‘காதி’ ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது, இதில் அனுஷ்காவின் கதாபாத்திரம் தைரியமான தோற்றத்தில் காணப்படுகிறது. இப்படத்தில் அவரது தோற்றம் உணர்ச்சிகரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மேலும், நடிகர் விக்ரம் பிரபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது அவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமாகும்.
அனுஷ்கா வேதம் படத்தை தொடர்ந்து கிரிஷ் ஜகர்லமுடியுடன் இணையும் இரண்டாவது படமாக காதி படம் உருவாகியுள்ளது. அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘பாகமதி’ போன்ற படங்களில் தனது நடிப்பால் புகழ்பெற்று விளங்கினார்.
‘காதி’ படத்தின் மூலம் அனுஷ்கா மீண்டும் ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் தோன்றுவதாக அறியப்படுகிறது. முந்தைய படங்களை போலவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு காதி படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அனுஷ்கா ஷெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் காதி திரைப்படம் வரும் ஜூலை 11ம் தேதி உலக அளவிலான திரையரங்குகளில் வெளியாகும் என்பதை போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டிக்குப் பிறகு அனுஷ்காவின் நடிப்பை காண ரசிகர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…