இட்லி கடை போஸ்டர்: தற்போது தனுஷ் இயக்கத்தில் அவரது நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் இட்லி கடை. இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அருண் விஜய் வில்லன் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன் முறையாக அருண் விஜயை வைத்து தனுஷ் இயக்கும் படமாக இந்த இட்லி கடை திரைப்படம் அமைந்திருக்கிறது.
புதிய காம்போ: அதுவும் ஒரு புதிய காம்போ. அதனால் தனுஷ் அருண் விஜய் காம்போவில் உருவாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இதே தேதியில் தான் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக உள்ளது. அதனால் ஒரு பக்கம் அஜித் இன்னொரு பக்கம் தனுஷ் என முதன்முறையாக இருவரும் திரையில் மோத இருக்கிறார்கள்.
வெற்றிமாறனின் சாயல்: இதுவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அவருடைய இயக்கத்தில் அந்தப் படம் பெரியளவு பாராட்டை பெற்றது. வெற்றிமாறனின் சாயல் தனுஷிடம் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் வெளியானது.
க்ளிக் ஆன ஜோடி:அதற்கு அடுத்தபடியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கியுள்ளார். அவர் நான்காவது முறையாக இயக்கும் திரைப்படம் தான் இட்லி கடை திரைப்படம். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் நித்யா மேனன். இருவரின் கெமிஸ்ட்ரியும் திரையில் நல்ல முறையில் வெளிப்படுகிறது.
ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள். திருச்சிற்றம்பலம் படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எந்த அளவு பாராட்டைப் பெற்றதோ அதைவிட இட்லி கடை திரைப்படத்தில் வரவேற்பை பெறும் என நித்யாமேனன் ஒரு பேட்டியில் கூறினார். இந்த நிலையில் இட்லி கடை படத்தில் அருண் விஜயின் லுக் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அருண் விஜய் ஒரு பாக்ஸராக இந்த படத்தில் நடித்திருப்பார் என தெரிகிறது .அப்படிப்பட்ட ஒரு போஸ்டர் தான் இப்போது வெளியாகியிருக்கிறது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…