Connect with us

latest news

மோகன்லால், சிவராஜ்குமார் வரிசையில் ஜெயிலர்2 ல் இந்த நடிகரா? இவருக்கு தனி படமே எடுக்கனுமே

ஜெயிலர் வெற்றி: கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ,மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கூடவே மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரும் கேமியோ ரோலில் வந்து அசத்தியிருந்தனர்.

பீஸ்ட் தோல்வி எதிரொலி: படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சன் இயக்கிய திரைப்படம் என்பதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரு வித பயம் இருந்தது. இந்த படத்தையும் டீலில் விட்டு விடுவாரோ நெல்சன் என பயந்து போயிருந்தனர்.

பிஸியான ரஜினி: ஆனால் படத்தை மாசாக ஆக்சன் கமர்சியலாக கொண்டு சேர்த்தார் நெல்சன். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்கும் நெல்சன் மற்றும் அனிருத்துக்கும் காரை பரிசாக அளித்து அசத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியது. அதன் பிறகு ரஜினி வேட்டையன், லால் சலாம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

ஜெயிலர் 2: இப்போது தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. தற்போது ரஜினி கூலி படத்தில் நடித்து வருவதால் இதனுடைய படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்ததும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என நெல்சன் தெரிவித்து இருந்தார்.

அதற்கான ப்ரோமோ சூட் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு டீசராக வெளியாகும் என அறிவித்திருந்தது. எந்த படம் என்பதை பற்றி கூறாமல் சஸ்பென்சாக அறிவித்திருந்தது. ஆனால் இது கண்டிப்பாக ஜெயிலர் 2 படத்தின் டீசர் புரோமோவாக தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அவருக்கு என ஒரு தனி பேக்கேஜாக படத்தில் இருக்க வேண்டும். அது சரி வராது. சரி எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாராம். ஒருவேளை ஜெயிலர் 2 படத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் முயற்சி எடுப்பார் என தெரிகிறது. பாலகிருஷ்ணா என்றாலே பவர்ஃபுல் ஆக்சன் ஹீரோ தான் .அதனால் அவர் உள்ளே வரும் பட்சத்தில் படத்தில் கூடுதல் முக்கியத்துவம் திரைக்கதையில் கொடுக்கப்பட வேண்டும் என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top