நடிகை மீனா கணவரை இழந்து வாடி வரும் நிலையில், நடிகர் தனுஷை 2ம் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் சமீபத்தில் பரவி அவரை மனம் நோகச் செய்தது. இந்நிலையில், அடுத்ததாக இன்னொரு வதந்தி ஒன்று தீயாக மீனாவை சுற்றி படுமோசமாக பரவி வந்த நிலையில், அதற்கு மறைமுகமாக மீனாவும் எக்ஸ் தளத்தில் காட்டமாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மீனா மற்றும் எல். முருகன் விவகாரம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மீனாவுக்கும் எல். முருகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேவையில்லாத வதந்திகளை கிளப்பி விட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் போது மத்திய அமைச்சர் எல். முருகன் வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களை தாண்டி சினிமாவில் இருந்து மீனா மற்றும் கலா மாஸ்டர் இருவரும் சென்றனர். பொங்கல் பண்டிகைக்கு சென்றதை 7 மாதங்கல் கழித்து தற்போது மீனாவுக்கும் எல். முருகனுக்கும் உறவு இருந்ததாக மோசமாக எழுதுவது ரொம்பவே தப்பு என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் மீனா தனது எக்ஸ் தள பக்கத்தில், முட்டாள்கள் தான் தேவையில்லாத வதந்திகளை பரப்புவார்கள் என காட்டமாக பதிவிட்டு இருந்தார். பாஜகவுக்கு எதிரானவர்கள் தான் இதை தற்போது பெரிது படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் மீனாவுக்கு ஆதரவு தரும் தொனியில், இதற்கு எல்லாம் வருத்தப்பட வேண்டாம் மீனா என கமெண்ட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீனா பற்றிய வதந்திகள் வெளியாகி வருகின்றன.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…