Categories: latest news throwback stories

பாக்கியராஜ் – பாரதிராஜா இடையே இருந்த கருத்து வேறுபாடு… அதனாலதான் கமல் படத்தில் அப்படி ஒரு மாற்றமா?..

குருநாதர், சீடர் என்றால் பொதுவாக ஒத்தக் கருத்துகளே மேலோங்கி இருக்கும். ஆனால் இங்கு அது தலைகீழாக உள்ளது. அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது தலையாய சீடரான பாக்கியராஜிக்குமே ஒரு படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கருத்து வேறுபாடு உண்டானது. அதன்பிறகு இயக்குனர் இமயம் என்ன முடிவு எடுத்தாருன்னு பார்ப்போமா…

ஒரு கைதியின் டைரி படத்தின் கிளைமாக்ஸ் பாக்கியராஜிக்குப் பிடிக்காததால தான் இந்தில எடுக்கும்போது மாத்திட்டாருன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார் ஒரு நேயர். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

உங்களுடைய கேள்வியையே கொஞ்சம் மாத்திக்கணும்னு நினைக்கிறேன். அந்தப் படத்திற்காக பாக்கியராஜ் எழுதிய கிளைமாக்ஸ் பாரதிராஜாவுக்குப் பிடிக்கல. அதன் காரணமாகத் தான் கலைமணியை ஒரு நல்ல கிளைமாக்ஸ் எழுதித் தரச் சொன்னார்.

ஒரு கைதியின் டைரி படத்தில் இடம்பெற்றிருப்பது கலைமணி எழுதிய கிளைமாக்ஸ் தான். அந்த கிளைமாக்ஸ் பாக்கியராஜிக்குப் பிடிக்கல. அதனால தான் இந்தியில அந்தப் படத்தை உருவாக்கும்போது தான் எழுதி வைத்திருந்த கிளைமாக்ஸை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.

இதுல குறிப்பிடத்தக்க அம்சம் என்னன்னா தமிழில் ஒரு கைதியின் டைரி என்ற பெயரில் வெளியான கமல் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியில் ஆக்ரி ரஸ்ரா என்ற பெயரில் வெளியான ஒரு கைதியின் டைரி படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல், ரேவதி, ராதா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்து வெளியான படம் ஒரு கைதியின் டைரி. இந்தப் படத்திற்கு பாக்கியராஜ் கதை எழுதி இருந்தார். வைரமுத்துவின் முத்தான பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட தந்தை, மகன் கேரக்டர்களில் நடித்து அசத்தி இருந்தார். ஏபிசி நீ வாசி, இது ரோசாப்பூ, நான் தான் சூரன், பொண்மானே கோபம் ஏனோ ஆகிய பாடல்கள் உள்ளன.

Published by
ராம் சுதன்