Connect with us
pavani

latest news

பிக் பாஸ் பிரபலத்தை கட்டிப் பிடித்து கிஸ் அடிக்கும் பாவனி!.. எல்லாம் அந்த விசேஷத்துக்குத்தானாம்!..

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

சினிமாவில் இருவரும் சாதித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமீர் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அஜித் நடித்த துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர்.

 

சின்னத்திரை தாண்டி பெரிய திரையிலும் இருவரும் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், அமீரின் பிறந்தநாளை முன்னிட்டு குட்டியா ஒரு கேக் வாங்கி வெட்டி தனது காதலருடன் ரொமான்டிக் பர்த்டேவை பாவனி ரெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அமீரை கட்டிப்பிடித்து, முத்தம் தருவது போல போஸ் கொடுத்து பாவனி ரெட்டி வெளியிட்டுள்ள ரொமான்டிக் கிளிக் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிக் பாஸ் சீசன் ஐந்துக்கு பிறகு, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இருவரும் கலந்து கொண்டு நடனமாடி டைட்டில் வின்னர் பட்டத்தை சுஜா வருணி – சிவா ஜோடியுடன் இணைந்து பெற்றனர்.

 

வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பாவனியும் வெறும் பனியன் அணிந்துக் கொண்டு அமீரும் தூங்கி எழுந்ததும் நள்ளிரவு 12 மணிக்கு கேக் கட் செய்த புகைப்படங்களா இது என்றும் அந்த நேரத்திலும் போட்டோகிராஃபர் கிடைத்துள்ளாரே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

 

 

 

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top