வெறும் 80 நாள்... போட்டியாளர் இத்தனை பேர் தான் - பிக்பாஸ் 4ல் புதிய மாற்றம்!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்து கசிந்த சமீபத்திய தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலால் இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் 16 போட்டியாளர்கள் என்ற முறையை மாற்றி தற்ப்போது வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளனர். அத்துடன் 100 நாட்கள் என்ற நாளை குறைத்து வெறும் 80 நாளிலேயே இந்த சீசனை முடிக்க பிக்பாஸ் டீம் முடிவெடுத்துள்ளனராம்.