பார்த்திபன் அறிமுகமான புதிய பாதை படம் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்துடன் போட்டியாக வெளியானது. அப்போதே பார்த்திபன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அபூர்வ சகோதரர்கள் மற்றும் புதிய பாதை என இரண்டு படங்களும் சிறப்பாகவே ஓடின.
அதே போல பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்துடன் தனது டீன்ஸ் படத்தை பார்த்திபன் மோத விட்டுள்ளார். இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், மனதளவில் சந்தோசத்தில் இருக்கும் பார்த்திபன் எப்படியாவது நம்முடைய படம் இந்த வாரம் ஓடிவிடும் என்கிற கணிப்புடன் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவுக்குபுளூ சட்டை மாறன் கலாய்க்க ஆரம்பித்துள்ளார்.
கடைசியாக பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷார்ட் படம் என பார்த்திபன் விளம்பரம் செய்த நிலையில், அது பொய்யான விளம்பரம் என்றும் வெளிநாட்டில் ஏற்கனவே சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது என பார்த்திபனை கடுமையாக புளூ சட்டை மாறன் விளாசித் தள்ளினார்.
பதிலுக்கு பார்த்திபனும் புளூ சட்டை மாறனை தொடர்ந்து தாக்க ஆரம்பித்தார். இருவரும் மாறி மாறி சண்டை போடத் தொடங்க சோஷியல் மீடியாவே கன்டென்ட்டுகளால் நிரம்பின. இந்நிலையில், மீண்டும் பார்த்திபனை சீண்ட ஆரம்பித்திருக்கிறார் புளூ சட்டை மாறன்.
டீன்ஸ் திரைப்படம் தனக்கு லாபமே தரவில்லை 10 பைசா கூட வரவில்லை என சனிக்கிழமை பார்த்திபன் பேட்டி அளித்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்தியன் 2 வேண்டாம் சாமி என டீன்ஸ் பக்கம் ஒதுங்கிய மக்கள் கொடுத்த வரவேற்பால் பூரித்துப் போனார் பார்த்திபன்.
இந்த படத்தை மக்கள் கொண்டாடவில்லை என்றால் சினிமாவை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தேன். மக்களாகிய நீங்கள் அதை தடுத்து விட்டீர்கள் என பதிவிட்டு நன்றி தெரிவித்து தொடர்ந்து படத்தை பார்த்து ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த பதிவு அதற்குள் புளூ சட்டை மாறன் கண்ணுக்கு பட்ட நிலையில், அப்போ படம் ஹிட்டுன்னு சொல்றாரா? என வம்பிழுக்க ஆரம்பித்து விட்டார் பார்த்திபன்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…