இப்போது அரசியல் களத்தில் ஒரே பரபரப்பாக பேசப்படுவது விஜய் ஆளுநரை போய் சந்தித்தது பற்றித்தான். இதே ஆளுநரைத்தான் பதவி விலக வேண்டும் என விக்கிரவாண்டி மாநாட்டில் அவரது கொள்கை கோட்பாடாக இருந்தது. ஆனால் இன்று கமுக்கமாக ஆளுநரை போய் சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. முக்கியமாக திரைவிமர்சகர் புளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் இருந்து அரசியல் ரீதியாக எப்படியெல்லாம் கனெக்ட் ஆகிறார் என்பதை பற்றி பதிவு செய்திருக்கிறார். இதோ அவருடைய பதிவு:
மெர்சல் படத்தில் பேசிய வசனங்கள் மூலம் பாஜகவை கிண்டலடித்தார் விஜய். குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி கடுமையாக பேசியிருந்தார். இது அக்கட்சியின் மத்தியில் பெரிய பிரளயமே ஏற்பட்டது. அதன் பிறகுதான் ரெய்டே வந்தது. அதன் பிறகு சர்கார் பட இசைவெளியீட்டு விழாவில் ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும். கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பேசி அய்யோ போதும்டா சாமி என்ற மாதிரி பம்மினார்.
விக்கிரவாண்டி மாநாட்டில் பகவத்கீதை நூலை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டார்.மாநாட்டில் 95% திமுகவை மட்டும் தாக்கி பேசியிருந்தார். பிளவுவாத சக்தி என மேம்போக்காக ஈயம் பூசினார்.அம்பேத்கர் நூல் வெளியீட்டில் காஞ்சி மகா பெரியவரை நல்லவர் என ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார். ரமணர், சாய்பாபா உள்ளிட்ட பல துறவிகள் இருந்தும் அவர்களில் ஒருவரின் பெயரையும் சேர்த்து குறிப்பிடவில்லை.
அதன்பிறகு பேச வந்த விஜய்யும் இதுபற்றி எதுவும் பேசவில்லை. அந்நிகழ்ச்சியில் வழக்கம்போல திமுகவை மட்டும் சாடினார் விஜய்.திமுகவை விஜய் விமர்சிக்க ஆரம்பித்தது முதல் இன்று ஆளுநரை சந்தித்தது வரை விஜய்யை உடனுக்குடன் பாஜக தலைவர்கள்தான் அதிகம் பாராட்டுகிறார்கள். தனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என மாநாட்டில் முழங்கிய விஜய் நிஜத்தில் திமுகவிற்கு எதிராக மட்டுமே கத்திச்சண்டை போடுகிறார்.
vijay
எங்கே தன்னை பாஜகவின் B டீம் என சொல்லிவிடுவார்களோ என்பதற்காக லேசாக பாஜகவை கண்டிப்பதாக காட்டிக்கொள்வதாக தெரிகிறது.இரு கட்சிகளையும் சமமாக தராசில் வைத்து விமர்சிக்காதவரை உங்களை பாஜகவின் B டீம் என்றே கருத வேண்டியுள்ளது. அதற்குத்தான் இத்தனை உதாரணங்கள் என புளூசட்டை மாறன் விஜயை வறுத்தெடுத்திருக்கிறார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…