">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிரேக்கிங் நியூஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு நடந்த கொடுமை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் வெடிக்கப்போகும் சண்டை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்ப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் தனக்கு நடந்த சில அக்கிரமங்களை பிரேக்கிங் நியூஸாக படித்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், ” அண்ணியான தனம் வாசலில் கோலம் போட்டது தான் என்று கூறியதுடன் தனது நெக்லஸை திருடி வளைகாப்பு விழாவில் போட்டுக்கொண்டிருப்பதையும் சுட்டி காட்டி இன்றைய தொடரை காண நல்ல பரபரப்பான புரோமோஷன் கொடுத்துள்ளார் முல்லை . இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.