">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
படுக்கைக்கு அழைப்பது எழுதப்படாத விதி – கமல் பட நடிகை குற்றச்சாட்டு!
ஆளவந்தான் படத்தில் நடித்த நடிகை ரவீணா டண்டன் பாலிவுட்டில் நடிகைகளுக்கு நடக்கும் கேஸ்ட்டிங் கவுச் பற்றி பேசியுள்ளார்.
ஆளவந்தான் படத்தில் நடித்த நடிகை ரவீணா டண்டன் பாலிவுட்டில் நடிகைகளுக்கு நடக்கும் கேஸ்ட்டிங் கவுச் பற்றி பேசியுள்ளார்.
தமிழில் சாது மற்றும் ஆளவந்தான் என்ற இரண்டே படங்களில் மட்டுமே நடித்துள்ளார் நடிகை ரவீனா டண்டன். ஆனால் ஆளவந்தான் படத்தில் அவரது நடிப்புக்காக இன்றும் நினைவு கூறப்படுகிறார். பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நடிகைகளில் இருக்கும் ரவீணா டண்டன் இப்போது கே ஜி எஃப் – 2 படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இவர் இந்திய சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வரு மீடூ பற்றி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘முதலில் பாலிவுட்டில் எனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. அதற்கு நடிகர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற பாலிவுட்டின் எழுதப்படாத விதி. அதற்கு நான் ஒத்துக்கொள்ளாததால் எனக்கான வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன’ என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.