Connect with us

Cinema News

ஒரு வசனத்துக்காக ‘A’ சான்றிதழ்!.. சென்சார் கெடுபிடிக்கு அடங்காத வெற்றிமாறன்!..

விடுதலை:

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை. அந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். படம் ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் விடுதலைப் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து விடுதலைப் படத்தில் இரண்டாம் பாகமும் தயாரானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியை மையப்படுத்தி கதைக்களம் இருக்கும் என தெரிகிறது. அதனால் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் இந்த படத்தில் புதியதாக இணைந்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

சென்சார் விதித்த தடை:

இதற்கிடையில் படத்தை சென்சார் குழுவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஏ சான்றிதழை பொறுத்த வரைக்கும் ஒரு படம் முழுவதும் வன்முறை காட்சிகளாக இருக்கும் பட்சத்தில் ஏ சான்றிதழ் கொடுப்பார்கள். அப்படி இல்லை என்றால் ஆபாச காட்சிகள் இருந்தால் ஏ சான்றிதழ் கொடுப்பார்கள்.

விடுதலை படத்தை பொருத்தவரைக்கும் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்து இருக்கிறதா என்ற நோக்கில் பார்க்கும் பொழுது படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் இருந்த ஒரே ஒரு வசனத்திற்கு தான் இந்த சான்றிதழை கொடுத்ததாக ஒரு ஷாக்கிங் ஆன தகவல் கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் ராஜீவ் மேனன் ஒரு அதிகாரியாக நடித்திருப்பார்.

அப்படி என்ன வசனம்?:

அவரை குறிப்பிட்டு இந்த வசனம் அந்த படத்தில் இடம்பெற்று இருக்குமாம். அந்த வசனத்தை கண்டிப்பாக நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் படக் குழுவுக்கு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இதற்கு வெற்றிமாறன் அந்த ஒரு வசனம் தான் இந்த படத்திற்கு ஒரு பெரிய பில்லர். அதனால் அந்த வசனத்தை தூக்க முடியாது என சொல்லி மறுத்திருக்கிறார்.

அதற்கு சென்சார் அதிகாரிகள் அப்போ இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கொடுக்க முடியும் என சொல்ல பரவாயில்லை எனக்கு அதில் ஒன்றும் பிரச்சினையும் இல்லை என வெற்றிமாறன் கூறிவிட்டாராம். அதனால் அந்த ஒரே ஒரு வசனத்திற்காக தான் ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இப்போது தகவல் கிடைத்துள்ளது. அப்படி என்ன வசனம் அதில் இருக்கிறது என படத்தை பார்க்கும் பொழுது தான் நமக்குத் தெரியவரும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top