அஜித்தை கலாய்த்து டீசர்ட்.... விகடனே மன்னிப்பு கேள்!.. பொங்கியெழுந்த தல ரசிகர்கள்...

அஜித்தை கலாய்த்து டீசர்ட்.... விகடனே மன்னிப்பு கேள்!.. பொங்கியெழுந்த தல ரசிகர்கள்...

சில நாட்களுக்கு முன்பு ‘ஹிந்தி தெரியாது போடா’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. அதனைத்தொடர்ந்து ‘நான் தமிழ் பேசும் இந்தியன்’, ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்பது போன்ற பல வாசகங்களை கொண்ட டீசர்ட்ட்கள் வலம் வருகிறது.
இந்நிலையில், பிரபல வார இதழான விகடன் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தது. அஜித் அணிந்திருக்கும் டீ சர்ட்டில் ‘வெளியே வரமாட்டேன் போடா’ என்கிற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இதைக்கண்டு கடுப்பான தல ரசிகர்கள் விகடன் இதழை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த புகைப்படத்தை நீக்க வில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.