">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எங்கள் சின்னம் தென்னை மரம் – தென்னங்கன்று கொடுத்த வேட்பாளர் கைது !
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருக்காக அமமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாக்காளர்களுக்கு தென்னங்கன்று கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருக்காக அமமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாக்காளர்களுக்கு தென்னங்கன்று கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருக்காக அமமுக சார்பில் பிலாவிடுதியைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு சின்னமாக தென்னை மரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் சின்னமான தென்னைமரத்தை குறிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு தென்னங்கன்றை பரிசாக அளித்துள்ளனர்.
இதுபற்றி பறக்கும் படை அதிகாரி முருகேசனுக்குத் தகவல் வர தென்னங்கன்றுகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.