latest news
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி யோகிபாபு இந்த வேலையா பார்த்தாரு…! அந்த நல்ல எண்ணம் தான் இங்க வரவச்சிருக்கு…
காமெடி நடிகர்களில் இன்று படுபிசியாக இருப்பவர் யோகிபாபு. இவரை விட்டால் காமெடிக்கு ஆளே இல்லை என்று தான் தோணுகிறது.
காமெடி நடிகர்களில் இன்று படுபிசியாக இருப்பவர் யோகிபாபு. இவரை விட்டால் காமெடிக்கு ஆளே இல்லை என்று தான் தோணுகிறது.
நடிகர் சந்தானமும், சூரியும் ஹீரோயிசம் காட்டப் போயிட்டாங்க. யோகியும் அப்படிப் போனாலும் காமெடிக்குப் பஞ்சமில்லை. அவர் வந்தாலே போதும். சிரிப்பு எங்கிருந்தாலும் வந்து விடும்.
மான் கராத்தே, யாமிருக்க பயமேன், தில்லாலங்கடி, வேலாயுதம், சூது கவ்வும், கலகலப்பு, அட்டகத்தி, பரியேறும் பெருமாள் படங்களில் பட்டையைக் கிளப்புவார். சின்ன கேரக்டர் தான் என்றாலும் நெஞ்சில் நிலைத்து விடுவார். அப்படி ஒரு பிரமாதமான ஆனா யதார்த்தமான நடிப்பை அவரிடம் பார்க்கலாம்.
அவருக்கு உரிய தனி ஸ்டைல் எதுன்னா அவரோ ஹேர் தான். எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக கோலமாவு கோகிலா படத்தில் கதாநாயகனாகவே நடித்து அசத்தி விட்டார். அதிலும் ஹீரோயின் நயன்தாரா. மண்டேலா படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா, சுல்தான், கர்ணன், நவரசா, டிக்கிலோனா, அனபெல் சேதுபதி ஆகியவை இவர் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த படங்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்து கலக்கி இருப்பார். இவர் 2009ல் யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். 177 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டவன் கட்டளை, குர்கா, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் இவரது தனித்துவமான நடிப்பைக் காணலாம். இவற்றில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ். 2004ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் தான் சந்தானமும் பிரபலமானார். அதன் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பல படங்களில் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் திரைத்துறைக்கு வரும் முன் என்ன வேலை பார்த்தார் என்று இவரே சொல்கிறார்.
நான் ஒரு சிலிண்டர் கடையில வேலை பார்த்த பையன். நான் சினிமாவில் கோடி கோடியா சம்பாரிப்பன்னு நினைத்துக் கொண்டு நடிக்க வரவில்லை. மூணு வேளை சோறு கிடைச்சா போதும். யார் கிட்டேயும் சோத்துக்காக கையேந்தி நிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் நடிக்க வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...