அமிதாப் கைகுலுக்கும் நபர் தாவூத் இப்ராஹிமா? கொளுத்திப் போட்ட நெட்டிசன்!

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமோடு அமிதாப் பச்சன் கைகுலுக்குவது போல உள்ள படம் என்று போலியான செய்தி ஒன்று இணையத்தில் பரவியது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமோடு அமிதாப் பச்சன் கைகுலுக்குவது போல உள்ள படம் என்று போலியான செய்தி ஒன்று இணையத்தில் பரவியது.
மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சர்வதேச போலிஸாரால தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். அவர் இப்போது பாகிஸ்தானின் கராச்சியில் பாகிஸ்தான் அரசின் ஆதரவோடு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரோடு கைகுலுக்குவது போன்ற புகைப்படம் என்று ஒரு படத்தை இணையத்தில் ஒருவர் பகிர்ந்தார். மேலும் அதை அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் டேக் செய்தார். ஆனால் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன் அந்த படத்தில் தாவூத் இல்லை என்றும் அது மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சங்கரராவ் சவான் விளக்கம் அளித்தார். அதன் பின்னர் அந்த படத்தையும் டிவீட்டையும் அவர் நீக்கினார்.