Categories: Cinema News latest news

யம்மாடியோவ்!.. விமர்சனங்களை கடந்து 2வது நாளிலும் வசூல் வேட்டை நடத்திய ராயன்!.. இத்தனை கோடியா?..

தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோ கத்தியை எடுத்து வெட்டுவதை மட்டுமே ரசிக்கும் ரசிகர்கள் என்கிற முடிவுக்கு இயக்குனர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் தெரிகிறது. பலரை அடிப்பதும், வெட்டுவதும் சுடுவதும் தான் ஹீரோயிசம் என நினைக்கின்றனர்.

அதை கச்சிதமாக புரிந்து கொண்ட நடிகர் தனுஷ் ப. பாண்டி போல படம் பண்ணினால் பாராட்ட மாட்டார்கள், வசூல் வராது என்பதை புரிந்து கொண்டு லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் இறங்கி சம்பவம் செய்துள்ளார்.

தனுஷின் 50-வது படமாக வெளியான ராயன் திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை என இரண்டு நாட்களிலும் சீரான வசூலைப் பெற்றுள்ளது.

முதல் நாள் 12.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய தனுஷின் ராயன் திரைப்படம் இரண்டாம் நாளான நேற்று 13.8 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 2 நாட்களிலும் டபுள் டிஜிட் வசூலை ராயன் படம் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 26 கோடி முதல் 27 கோடி ரூபாய் வசூலை ராயன் திரைப்படம் 2 நாட்களில் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாகவும் சில டிராக்கர்கள் கூறுகின்றனர். சன் பிக்சர்ஸ் வசூல் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

ஞாயிற்றுக்கிழமை இன்றும் 15 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமையான நாளையும் விடுமுறை என்பதால் நான்கு நாட்களில் இந்தியாவிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் இந்த படம் இரண்டாவது வாரத்திலும் இதேபோல வசூல் ஈட்டினால் தான் வெற்றிப்படமாக மாறும் என்கின்றனர்.

Saranya M
Published by
Saranya M