Connect with us

latest news

வேள்பாரி வேலைக்கு ஆவாது!.. வாரிசு நடிகருடன் இணையும் ஷங்கர்!. பரபர அப்டேட்!..

Director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் திரைப்படமே அதிக பட்ஜெட்டில் உருவானதால் தொடர்ந்து எல்லா படங்களையும் அதிக பட்ஜெட்டுகளிலேயே எடுத்தார். காதலன், ஜீன்ஸ், இந்தியன் என மெகா பட்ஜெட் படங்களை இயக்கியவர் இவர்.

இதனால் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக மாறினார் ஷங்கர். அவரின் இயக்கத்தில் நடிக்க ஹிந்தி மற்றும் தெலுங்கு பட நடிகர்களே ஆர்வம் காட்டினார்கள். முதல்வன் பட கதையை ஹிந்தியிலும் ரீமேக் செய்தார். ஐஸ்வர்யா ராயை வைத்து ஜீன்ஸ் படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஒரு பாடலுக்காக உலகின் 7 அதிசயங்களுக்கும் சென்று காட்சிகளை எடுத்தார்.

அதன்பின் இந்தியன், அந்நியன், ஐ, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கினார். அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பதால் சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையும் கொடுத்தது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படமும் தோல்வி அடைந்தது.

இதனால்தான் இந்தியன் 3 படத்தின் ரிலீஸும் தள்ளி போயிருக்கிறது. அந்த படத்தில் மேலும் சில காட்சிகளை எடுத்து இணைத்த பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார். இந்தியன் 2 படம் உருவாகும்போதே தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்கிற படத்தை ஷங்கர் இயக்கினார்.

இந்தியன் 3 படத்தை ஷங்கர் எப்போது முடித்துக் கொடுப்பார் என தெரியாததால் கேம் சேஞ்சர் பட ரிலீஸுக்கு பிரச்சனை செய்தது லைக்கா. எனவே, இந்தியன் 3 படத்தை எடுத்தவரை போட்டு காட்டுகிறேன். கேம் சேஞ்சர் ரிலீஸுக்கு பின் இந்தியன் 3 பட வேலைகளை துவங்குகிறேன் என ஷங்கர் ஒத்துகொண்டார். அப்படி வெளியான கேம் சேஞ்சர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஒருபக்கம், 2 வருடங்களுக்கு முன்பே வேள்பாரி நாவலை 3 பாகங்களாக இயக்க திட்டமிட்டு அதற்கான திரைக்கதையையும் ஷங்கர் எழுதி வைத்துவிட்டார். இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் என்பதாலும், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் ஓடவில்லை என்பதாலும் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

எனவே, இது தாமதமாகும் என யோசித்த ஷங்கர் குறுகிய காலத்தில் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறாராம். சியான் விக்ரமே ஷங்கரிடம் கோரிக்கை வைத்ததால் இது நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top