">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உதவி செய்யும் போது புகைப்படம் வேண்டாம் – இப்படி சொன்னது கமல் மட்டும்தான்… குவியும் பாராட்டுகள்
கொரோனா நிதி மற்றும் நிவாரண பொருட்களை மக்களுக்கு கொடுக்கும் போது அதை புகைப்படம் எடுக்காதீர்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலிகள், ஏழை தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதேநேரம், உதவி செய்யும் போது புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், தனது கட்சிக்காரர்கள் யாரும் செய்யக்கூடாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
உதவிகள் வழங்கும்போது புகைப்படம் வேண்டாம். உதவி பெறுபவரின் புகைப்படம் வேண்டாம். உதவிப் பொருட்கள் மீது தலைவர் புகைப்படம் வேண்டாம்
செய்யும் உதவிகளுக்கு எதற்கு பரப்புரை சத்தம்.
இது நாற்பதாண்டு நற்பணி இரத்தம்களத்தில் நம்மவர்கள் என்பதற்கு இந்த பதிவு போதும்#MNMSoldiersOnField pic.twitter.com/MbbiokGBxQ
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 18, 2020