Good Bad Ugly: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது. இந்த படம் கடந்த ஒரு வருடங்களாக உருவாகி வந்தது. ஹாலிவுட்டில் உருவான பிரேக் டவுன் படத்தின் கதையை தமிழில் சில மாற்றங்களை செய்து உருவாக்கியிருக்கிறார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், முறையாக அனுமதி வாங்காததால் பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனமான பாராமண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் லைக்காவுக்கு நோட்டீஸும் அனுப்பியது.
விடாமுயற்சி: அஜர்பைசான் நாட்டில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தினார்கள். அஜித்தின் மனைவியாக திரிஷா, வில்லனாக அர்ஜூன், அர்ஜூனுக்கு ஜோடியாக ரெஜினா கெசந்த்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்க அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கே ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு அதன்பி பின் வாங்கியது.
விடாமுயற்சி வசூல்: அதற்கு காரணம் லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியது. சில படங்களின் தோல்வியால் அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. ஒருவழியாக பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியானது. ஆனால், இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெறவே வசூல் கடுமையாக பாதித்திருக்கிறது. 2 நாள் வசூல் சேர்த்து இந்தியாவில் இப்படம் 34 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
குட் பேட் அக்லி பட்ஜெட்: கண்டிப்பாக இப்படம் லைக்காவுக்கு பெருத்த நஷ்டத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. மொத்தத்தில் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியிருக்கிறது விடாமுயற்சி. இது அஜித்தின் நடிப்பில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தின் வியாபாரத்தை பாதித்துள்ளது. அஜித்துக்கு 162 கோடி சம்பளம், ஆதிக் ரவிச்சந்தரனுக்கு 10 கோடி என மொத்தம் 275 கோடி செலவில் இப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக ஒரு நடிகரின் ஒரு படம் படு தோல்வி அடைந்தால் அது அவரின் அடுத்த படத்தின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கும். தற்போது அதே நிலைமை விடாமுயற்சியால் குட் பேட் அக்லிக்கு நடந்துள்ளது. விடாமுயற்சியால் குட்பேட் அக்லிக்கு டேபிள் லாஸ் 75 கோடி என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…