">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நான் உங்கள் ரசிகர் ஆகிவிட்டேன்.. இளம் இயக்குனரை திக்குமுக்காட செய்த மணிரத்னம்..
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்பவர் மணிரத்னம். தேர்ந்தெடுக்கும் கதை, குறைவான வசனம், நேர்த்தியான திரைக்கதை, திறமையான இயக்கம் என அவருக்கு நிகர் அவரே. அவரை பின்பற்றி திரைத்துரைக்கு வந்தவர்கள் பலர்.
அவர் இயக்கிய அலைபாயுதே படம் வெளியாகி கடந்த ஏப்.14ம் தேதியோடு 20 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் விதமாக, ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பதில் கூறினார். அப்போது பிரபலபங்களும் அவரிடம் உரையாடினர்.
அப்போது, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சில சிறப்பான படங்களை இயக்கி பாராட்டை பெற்ற மலையாள இயக்குனர் லிஜோவிடம் மணிரத்னம் பேசினார். லிஜோ நான் உங்களின் ரசிகன் ஆகிவிட்டேன். நீங்கள் இயக்கிய ‘அங்கமலே டையரிஸ்’ மற்றும் ‘ஆமென்’ ஆகிய 2 திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை என மணிரத்னம் கூறினார்.