">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஜெ.விற்கு பிறகு நான்தான்! 2021ல் தமிழ்நாட்டின் முதல்வர் – மீராமிதுனுக்கு இது தேவையா?
பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.�
எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது. சில சமயம் கொஞ்சம் ஓவராகவும் தன்னை பற்றி தம்மட்டம் அடித்துக்கொள்வதால் அவரை பலருக்கும் பிடிக்கவில்லை.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்திற்கு பகிர்ந்துள்ளார். அதில் ‘அம்மாவிற்கு பின் தமிழக முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உடையவர். தைரியத்திற்கும், புகழுக்கும் பெயர் போன நடிகை மீரா மிதுன்’ என எழுதப்பட்டுள்ளது. மேலும் ‘ நான் எப்போதும் ஊழலுக்கு எதிரானவள். ஊழலில்லா தமிழகத்தை என்னால் உருவாக்க முடியும். 2021ம் ஆண்டு என்னால் கண்டிப்பாக முதல்வராக முடியும்’ என பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது மன நோயின் உச்சம்’.. தெரிஞ்சுதாம் சொல்றியா? நீ என்ன லூஸா? என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.