Connect with us

Cinema News

கருத்து வேறுபாடா? இளையராஜா பயோபிக்கில் இதுதான் பிரச்சினையா?

நடிகர் தனுஷ்: கடந்த சில நாட்களாக தனுஷ் நடிப்பில் தயாராக போகும் இளையராஜா பயோபிக் திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்தப் படத்தில் என்ன நடந்தது என்பதை பற்றிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவ்வளவு சிறு வயதில் இந்த அளவு உயரத்தை அடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதற்கு காரணம் ஆரம்பத்தில் இவர் சந்தித்த அவமானங்களும் போராட்டங்களும் தான். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் உருவ கேலிக்கும் பல விமர்சனங்களுக்கும் ஆளானார் தனுஷ். இவர் எங்கே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் பல பேர் இவர் காது பட பேசி இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் மனதில் வாங்கிக் கொண்டு தன்னுடைய நடிப்பாலும் திறமையாலும் இன்று ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவின் பெருமையை காப்பாற்றி இருக்கிறார் தனுஷ்.

நடிப்பு அசுரனாக வலம் வந்தார்: குறிப்பாக அசுரன் திரைப்படம் இவரது வாழ்க்கையை திருப்பி போட்ட திரைப்படமாக அமைந்தது அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தொடர்ந்து கர்ணன், ராயன் என நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து இன்று ஒரு நடிப்பு அசுரனாக மாறி இருக்கிறார் தனுஷ். தற்போது இயக்குனராகவும் அடுத்த கட்ட நிலையை அடைந்திருக்கிறார் .

அவருடைய இயக்கத்தில் ராயன் திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் தயாராகி வருகிறது. அது போக இட்லி கடை படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தையும் தனுஷ் தான் இயக்கி வருகிறார்இட்லிக்கடை படத்தை பொருத்தவரைக்கும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அடுத்தடுத்த லைன் அப்: மேலும் தெலுங்கில் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் தமிழரசன் பச்சை முத்து இயக்கத்திலும் ஹிந்தியில் ஒரு படத்திலும் என தன்னுடைய லைன் அப்பை பிசியாக வைத்திருக்கிறார் தனுஷ். இதற்கிடையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாக இளையராஜா பயோ பிக் திரைப்படம் இருந்தது.

ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இளையராஜாவின் ஆரம்ப கால வாழ்க்கையில் இருந்து இன்றுவரை அவர் அடைந்திருக்கும் உச்சம் வரை அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகும் இந்த கதையில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கப் போவதாக இருந்தது. இந்த படத்தை இளையராஜா மற்றும் மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல நிறுவனம் தயாரிப்பதாக இருந்து.

டிராப் ஆனது: அதற்கான விழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் இளையராஜா பயோ பிக் பற்றி ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதில் முக்கியமாக இளையராஜா பயோகத்தில் கமல் திரைக்கதை வசனம் எழுதுவார் என்றும் சொல்லப்பட்டது .அதனால் இளையராஜாவாக தனுஷ் எப்படி நடிக்க போகிறார் என அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணத்தினாலும் சில பல கருத்து வேறுபாட்டு காரணத்தினாலும் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top