Categories: latest news

ஒரு வகையில் நானும் தலித்தான் –கமெண்ட்டுக்கு ரித்விகா பதில்!

நடிகை ரித்விகா வின் புகைப்படத்தின் கீழ் ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு அவர் நீண்ட விளக்கமளித்துள்ளார்.

பரதேசி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு இணையவாசி ஒருவர்பரவாயில்லையே இந்த பருவத்தில இந்த பன்னி கூட அழகா தெரியுறாங்கஎன்று அவரது சாதி பெயரை குறிப்பிட்டு மோசமாக கமென்ட் அடிக்க, உடனே அந்த நபருக்கு அவரது பாணியிலேசரிங்க மிஸ்டர் பாடுசாரிங்க மிஸ்டர் மாடு என தக்க பதிலடி கொடுத்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

அதையடுத்து மேலும் விளக்கமளிக்கும் விதமாக ‘நான்  தலித்தாக இருப்பின், மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் நான். வருந்துகிறேன். இனியாவது சாதியற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித்தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில், பெண்ணாகிய நானும் தலித். காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர்தானே. ஆம் தலித். எம்மை தலித்தாகிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகை பாராட்டியதற்கு நன்றி. பி.கு: தலித் பெண்கள் என்னைவிட அழகு.’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram