Categories: Cinema News latest news

ஆன் தி வே-ல ‘நாட்டாமை’ பட கேரக்டரை தட்டிப்பறித்த குஷ்பூ.. யார் நடிக்க வேண்டியது தெரியுமா?

நாட்டாமை:

சரத்குமார் தெரியரில் மிகவும் பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது நாட்டாமை திரைப்படம். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து வெளியான ஒரு குடும்ப திரைப்படம் தான் நாட்டாமை .அண்ணன் தம்பி இருவருக்கும் இடையேயான அந்த பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.

100 நாட்களைக் கடந்து இந்த படம் வெற்றிகரமாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடியது. அதில் பொன்னம்பலத்தின் தாய் கிளவி என்ற அந்த வசனம் இன்று வரை அனைவராலும் பேசப்படும் ஒரு வசனமாகும். ஏன் அந்த வார்த்தையை வைத்து ஒரு பாடலே உருவாகிவிட்டது.

அந்த அளவுக்கு அந்த வசனம் மிகவும் பிரபலமானது. நாட்டாமையாக சரத்குமாரின் தோற்றமும் அவருடைய முகபாவனையும் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருப்பார். ஆனால் முதலில் அந்த படத்தில் நடிக்க இருந்தவர் நடிகை லட்சுமி என கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

குஷ்பூ சொன்ன விஷயம்:

இந்த படத்திற்கு முதலில் லட்சுமியை தான் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்ய சென்று கொண்டிருந்தாராம் கே எஸ் ரவிக்குமார். போகும்போது பிரசாத் ஸ்டூடியோவில் குஷ்பு நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க அவரை அப்படியே பார்த்துவிட்டு போய்விடலாம் என அங்கே போய் இருக்கிறார் ரவிக்குமார் .

ஏற்கனவே புருஷ லட்சணம் திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் குஷ்பூ நடித்தவர் என்பதால் இருவருக்கும் அந்த பழக்கம் இருந்திருக்கிறது. அந்த ஒரு பழக்கத்தினால் குஷ்புவை சந்தித்து விட்டு போகலாம் என அங்கு சென்று இருக்கிறார். போன இடத்தில் நாட்டாமை படத்தின் கதையை பற்றி குஷ்புவிடம் சொல்ல உடனே குஷ்பூ இந்த கதை நன்றாக இருக்கிறது.

ஏன் என்னால் முடியாது?:

நான் நடித்தால் என்ன என கேட்டாராம். அதற்கு ரவிக்குமார் அந்த படத்தில் வயதான தோற்றம் மற்றும் பிளாஷ்பேக் என இரு வேடங்களில் நடிக்க வேண்டும். உனக்கு அது செட் ஆகுமா என்று தெரியவில்லை எனக் கூற அதற்கு குஷ்பூ ஏன் அண்ணாமலை படத்தில் நான் நரைத்த முடியுடன் நடித்திருப்பேனே எனக் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் இந்த படத்தில் குஷ்பூ ஒப்பந்தமானாராம். இது இது நாள் வரைக்கும் லட்சுமிக்கு தெரியவே தெரியாது. நான் ஒரு மேடையில் இந்த படத்தை பற்றி பேசும் பொழுது தான் அவருக்கே இந்த விஷயம் தெரிய வந்தது.

lakshmi

ஒருவேளை இது தெரிந்து கூட லட்சுமி என் மீது கோபப்பட்டு இருக்கலாம் என அந்த மேடையில் கிண்டலாக கூறினார் ரவிக்குமார். அப்போது லட்சுமி மைக்கை வாங்கி அதில் வரும் கொட்டா பாக்கு பாடலுக்கு என்னை ஆட வைத்தால் எப்படி இருந்திருக்கும் என கிண்டலாக கூற அதற்கு ரவிக்குமார் குஷ்பு வந்ததனால் தான் அந்த பாடலே உருவானது என கூறியிருப்பார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்