இந்தியன் 2 படம் நேற்று வெளியான நிலையில், கண்டிப்பாக ஷங்கர் ஏமாற்றமாட்டார் கமல்ஹாசன் படம் மொக்கையாக இருக்காது என நம்பி எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு முதல்முறையாக மோசமான தியேட்டர் அனுபவத்தை ஷங்கர் கொடுத்துள்ளார்.
ஐ படத்திலேயே இவரது ஆட்டம் முடிந்துவிட்டது என விமர்சனங்கள் குவிந்தன. அதன் பின்னர் வெளியான 2.0 படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அதுபோலவே இந்தியன் 2 படத்தையும் வசூல் ரீதியாக வெற்றி பெற வைத்து விடலாம் என நம்பி இரண்டு பாகங்களாக படத்தைப் பிரித்து கொடுத்திருக்கிறார் ஷங்கர்.
நேற்று வெளியான இந்தியன் 2 ரசிகர்களை பெரிதும் கவராத நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டருக்கு செல்லும் கூட்டம் பாதியாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளே படத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடவில்லை.
முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூலையாவது உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அளவில் முதல் நாள் வசூல் 26 கோடி வந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக அளவில் இந்த படத்துக்கு 35 கோடி முதல் 40 கோடி ரூபாய் வரை ஒட்டு மொத்த வசூல் இருக்கும் என தெரிகிறது. லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமா என்பது சந்தேகம்தான்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…