Connect with us

Cinema News

தமிழ் சினிமா வரலாற்றில் இது முதன்முறை!.. ஹாலிவுட் பாணியில் வெளியாகும் இந்தியன் 2….

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முதல் படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார் கமல். முதல் பாகத்தில் மகன் சந்துரு இறந்துவிடுவது போலவும், இந்தியன் தாத்தா சேனாதிபதி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுவது போலவும் படத்தை முடித்திருப்பார் ஷங்கர்.

முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் சுமாராக இருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் இந்தியன் 3 படமும் வெளியாகவுள்ளது. இந்தியன் 3 படத்தில் தனது கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதாக கமலே பல மேடைகளிலும் சொல்லிவிட்டார்.

இந்தியன் 3-யில் சேனாதியின் அப்பா வேடத்தில் கமல் நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். நாளை இந்தியன் 2 படம் வெளியாகவிருப்பதால் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. ஒருபக்கம், தமிழ் சினிமாவில் முதன் முறையாக இந்தியன் 2 படம் ஒரு சாதனையை செய்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்கிலும் நாளை இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அப்படி சுமார் 24 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியாகும் இந்தியன் 2 ஒரு வாரம் ஹவுஸ்புல்லாக ஓடினால் அதுமட்டுமே 25 கோடியை வசூல் செய்துவிடும் என சொல்லப்படுகிறது.

அதோடு, பொதுவாக தமிழ் படங்கள் ஒரு ஃபார்மேட்டில் மட்டுமே ரிலீஸ் ஆகும். ஆனால், இந்தியன் 2 IMAX, 2D, IQ, ஐஸ், 4XP, EPIC என 6 ஃபார்மேட்டில் இப்படம் வெளியாகவுள்ளது. சில ஆங்கில படங்கள் இப்படி வெளியாகி இருந்தாலும் இப்படி முதல் படமாக இந்தியன் 2 படம் வெளியாகவிருக்கிறது.

எனவே, நல்ல தியேட்டர்களில் பார்த்தால் இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு சிறத அனுபவத்தை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒருபக்கம், சென்னை போன்ற நகரங்களில் இந்தியன் படத்திற்கு டிக்கெட் விலை ரூ.190 ஆக நிர்ணயம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top