1. Home
  2. Latest News

அஜித் - சுதா காம்பினேஷன் உண்மையா? - ஜி.வி.பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

வலிமை படத்திற்கு பின் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கவுள்ளார்.  இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹாலிவுட்டில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் போல விறு விறு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படம் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேற்று டிவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது, அஜித் - சுதா காம்பினேஷ் காம்பினேஷன் நடக்குமா? என அஜித் ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ் ‘அது சூப்பரான கதை. அந்த கதையை சுதா என்னிடம் கூறியுள்ளார். அது நடந்தால் செமையாக இருக்கும். அது படமானால் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.