தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் அதுவும் சென்னையில் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி இங்கு இல்லை என்பது தான் பல பேருடைய பெரிய வருத்தம். அதனால்தான் ரஜினிகாந்த் அஜித் விஜய் கமல் என அனைவரின் படங்களும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படுகின்றன. பெப்சி அமைப்பிலிருந்தும் இதைப் பற்றி தான் புகாராக இருக்கிறது. இங்க இருக்கும் பெரிய நடிகர்கள் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்கு தான் சென்று அவர்கள் படப்பிடிப்பை நடத்த சொல்கிறார்கள் என்று.
இதனால் இங்கு உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து கூறுவது என்னவெனில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இருப்பது போல பெரிய தளம் இங்கு இல்லையே அதனால் தான் இங்கு படமாக்குகிறோம் என கூறுகிறார்கள். இந்த குறையை தீர்த்து வைக்க இப்பொழுது தான் சரியான தருணம் அமைந்திருக்கிறது.
இது சம்பந்தமாக வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். பல்லாவரத்தில் பிரம்மாண்டமாக ஒரு ஸ்டூடியோவை கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ஸ்டூடியோவில் மூன்று தளம் வரப்போகிறது. அதில் ஒரு தளம் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இருக்கிறதை விட பெரிய தளமாக வரப்போகிறது. அதுவும் இல்லாமல் இது மிகத் தொலைவிலும் கிடையாது.
சென்னையை தாண்டி ஒரு 50 கிலோமீட்டர் அல்லது 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடமும் கிடையாது. அது தான் இதில் இருக்கிற மிகப்பெரிய பிளஸ். அருகாமையில் பல்லாவரத்திலேயே அமைகிறது என்பது அனைவருக்கும் ஒரு பெரிய சந்தோஷம். தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் இந்த ஸ்டூடியோ ஒரு மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும் என தெரிகிறது.
ஐசரி கணேஷ் அவருடைய அடுத்த படத்தை சுந்தர் சி இயக்கத்தில் பண்ணப் போகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஸ்டூடியோவில் தான் ஆரம்பிக்கிறாராம். அதாவது சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தயாராக போகும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 .அந்த படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறப்போகிறது. இந்த பிலிம் சிட்டியால் பல போட்டியும் பெரிய அளவில் வரப்போகிறது.
என்னவெனில் பெப்சி ஸ்டூடியோவில் தான் ஜனநாயக படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கின்றது. இது பெப்சிக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த தளம். பூந்தமல்லியில் தமிழ்நாடு அரசே ஒரு பிலிம் சிட்டியை கட்டப் போகிறார்கள். கிட்டத்தட்ட 160 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி பட்ஜெட்டில் அது தயாராக போகிறது. அதில் எட்டு தளம் வரப்போகிறதாம். இதிலிருந்து தமிழ்நாட்டில் நிறைய ஸ்டூடியோஸ் வரப்போகிறது. நிறைய தளங்கள் வரும் என்ற பட்சத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியை நோக்கி படையெடுக்கும் அலைச்சல் என்பது இனிமேல் இருக்காது. இதனால் பெப்ஸி தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…