1. Home
  2. Latest News

ஏஜிஎஸ்-க்கு அடிச்ச ஜாக்பாட்.. பொன்முட்டையிடும் வாத்தாக மாறிய பிரதீப் ரங்கநாதன்


கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீஸான திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் டிராகன். இந்தப் படம் ரிலீஸாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. படத்தை பற்றிய கலெக்‌ஷன் விவரம் தான் இப்போது வைரலாகி வருகின்றது.

மூன்று நாட்களில் 50 கோடி. வரும் வாரங்களில் 75 கோடியை அடைந்துவிடும் என சொல்லப்பட்டது .அந்த 75 கோடியை இன்று டிராகன் திரைப்படம் கண்டிப்பாக அடையும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அளவில் மட்டும் இந்த படம் 45 கோடி அளவில் கலெக்ஷனை அள்ளி இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் தினமும் 8 கோடி என்ற அளவில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் வசூல் செய்து வருகிறதாம்.

பொதுவாகவே முதல் நாள் என்பது பெரிய அளவில் வசூலை அள்ளும். அடுத்த நாளிலிருந்து மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். சனி ,ஞாயிறு வந்தால் கொஞ்சம் ஏறும். அதன் பிறகு இறங்கும். இதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் டிராகன் படத்தை பொருத்தவரைக்கும் ரிலீசானதில் இருந்து இன்று வரை தினமும் எட்டு கோடி என்ற ரேஞ்சில் வசூல் செய்து வருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதனால்தான் நேற்று வரை தமிழக அளவில் 45 கோடி என்று அளவில் ரீச்சாகி இருப்பதாக சொல்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் டிராகன் படம் இதே மாதிரியான ஒரு வசூல் அளவில் சென்று கொண்டிருந்தால் குறைந்தபட்சம் 50 கோடி அளவில் ஷேர் மட்டும் கொடுக்கும் என கோடம்பாக்கத்தில் சொல்கிறார்களாம். 50 கோடி ஷேர் என்றால் கிட்டத்தட்ட 120 கோடி என்பது தான் அதனுடைய மொத்த வசூலாக இருக்கும் .

அதாவது இது தமிழ்நாட்டில் மட்டும். அப்படி பார்க்கும் பொழுது இது மிகப்பெரிய வசூலாக இருக்கும் .அதுமட்டுமல்ல இது ஏஜிஎஸ்-க்கு ஒரு பெரிய ஜாக் பாட்டாக இருக்கும். ஒரு ஒப்பீட்டாக பார்க்கும் பொழுது விடாமுயற்சி திரைப்படம் 30 கோடி அளவில் தான் ஷேரையே பெற்றிருக்கிறது. அப்போ பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டாவது படம் 50 கோடி ஷேர் அப்படி என்றால் எவ்வளவு பெரிய வெற்றி.


இது உண்மையிலேயே ஏஜிஎஸ் க்கு அடித்த ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். லவ் டுடே ஒரு பக்கம் பயங்கர ஹிட் .அதன் மூலமும் ஏகப்பட்ட கோடிகளை அள்ளினார்கள். அடுத்ததாக மீண்டும் பிரதீப் ரங்க நாதனை வைத்து டிராகன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வசூலை அள்ளி இருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.