தமிழ்த்திரை உலகில் ஜெயம் படத்தில் அறிமுகமானார் ஜெயம் ரவி. படத்தின் மாபெரும் வெற்றி அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்டது. அன்று முதல் வெறும் ரவி மோகன் ஜெயம் ரவி ஆனார். ஜெயம் ரவியின் தொடர் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பேராண்மை படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதே போல எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலும் அவருடைய திறமை பளிச்சிட்டது.
அவருக்கு திருமணமானதும் தான் பிரச்சனையே ஆரம்பித்து விட்டது. அன்பான மனைவி ஆர்த்திக்கு அதுவே ஆபத்தாகி விட்டது. அன்பு ஒரு எல்லை வரை தான். எப்போதும் அதிக அன்பு காட்டுகிறேன் என்று அதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது அதுவே ஆபத்தாக முடிந்து விடுகிறது என்பதைத் தான் அவர்களது தற்போதைய விரிசல் காட்டுகிறது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
இதையும் படிங்க… மோகன் வந்ததும் தப்பிச்சி ஓடி வந்துட்டேன்!.. கவனமா இருங்க!. நடிகரிடம் சொன்ன கமல்ஹாசன்!..
நடிகர் ஜெயம் ரவிக்கு சமீபத்தில் படங்கள் பிரச்சனையில் இருக்கு. அவருடைய மாமியார் தான் படத் தயாரிப்பாளர் என்றும் ஜெயம் ரவியை வைத்துப் படம் எடுப்பதாகவும் அப்போது அவர் 26 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் விரிசல் வந்து விவாகரத்து வரை போவதற்கான வாய்ப்புகள் இருக்குன்னும் சொல்றாங்க. இது பற்றி உங்கள் கருத்து என்ன என பிரபல வலைப்பேச்சாளர் அந்தனனிடம் நிருபரால் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
சம்பளம் பிரச்சனை என்பது இரண்டாவது தான். அங்கிருந்து முதலில் வெளியே வருவதற்காகத் தான் அவர் 25 கோடியே கேட்டாராம். உண்மையில் என்னன்னா ஜெயம் ரவி மேல அவரது மனைவிக்கு எப்போதும் சந்தேகம். அவருக்கு அடிக்கடி போன் போடுவது. அவர் எடுக்கலன்னா டைரக்டர், கேமராமேன், அசிஸ்டண்ட் என ஒரு ஆளை விட்டு வைப்பதில்லை. எல்லாருக்கும் போன் போட்டு அவரைப் பற்றி கேட்பது.
இதையும் படிங்க… கையை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்!.. கெட்டுப்போன சமந்தா பெயர்!.. ஆளை மாற்றிய விஜய்?..
யாருமே எடுக்கலைன்னா உடனே ஸ்பாட்டுக்கு கிளம்பி வந்து விடுவது என்ற ரீதியில் அவரது மனைவி போய்விட்டாராம். அதே போல அவுட்டோர் சூட்டிங் என்றால் எங்கே போற என எதுவும் கேட்காமல் திடீர்னு வந்து நிற்பது, ஜெயம் ரவியை வேவு பார்ப்பது போல இருந்தது அவரது செயல். இது வந்து ஜெயம் ரவிக்கு ஒரு கட்டத்தில் பொறுக்க முடியவில்லை. அதனால் தான் டைவர்ஸ் வரைக்கும் போனது. மற்றபடி பணம் கேட்டது எல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…