Categories: Cinema News latest news

ஷங்கரிடம் கோபப்பட்ட கமல்… சாரி சொன்ன இயக்குனர்… இதெல்லாமா நடந்தது?

இயக்குனர் ஷங்கரின் படங்கள் என்றாலே வெறும் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. அதற்கு வலுவான திரைக்கதையும், திருப்புமுனைக்காட்சிகளும் இருக்கும். அதே போல யாரும் போக முடியாத இடங்களுக்கு எல்லாம் சென்று படமாக்கி இருப்பார். அது மட்டுமல்லாமல் கிராபிக்ஸ் காட்சிகளில் மெனக்கிடுவார். பாடல்கள், இசை என எல்லா விஷயத்திலம் கவனம் செலுத்தி ஒரு புது ட்ரெண்ட் செட்டையே உருவாக்குவார்.

அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் விருந்து படைக்க வருகிறது இந்தியன் 2. இந்தப் படத்திற்கான பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அப்போது உரையாற்றிய கமல் இயக்குனர் ஷங்கரைப் பற்றி பல இடங்களில் பெருமையாகச் சொன்னார். பார்க்கலாமா…

‘இந்தியன் 2 படத்தில் எல்லாம் நடிக்கணுமா? அதான் ஏற்கனவே நடிச்சாச்சே’ன்னு நான் கேட்டுருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி என்னை நடிக்க வைத்தது இந்தப் படத்தின் திரைக்கதை. ஷங்கர் எடுக்கும் விதம். இந்தப் படத்தைப் பொருத்த வரை ரெண்டு பேருக்குமே ஜீரோ டாலரன்ஸ் தான். எந்த விஷயத்தில் என்றால் தரக்குறைவு என்பதில்

நீளமா வசனம் பேசி நடிச்சிக்கிட்டே இருப்போம். கடைசில இந்த இடத்துல கண்ணீர் வரணும். அது கொஞ்சம் மாறிட்டு என்றாலும் அதுக்காக ரெண்டு பேரும் மெனக்கிடுவோம். ‘அடிமைப்பெண்’ படத்தில் சத்யா ஸ்டூடியோவில் செட் போட்டு இருப்பார்கள். அதைப் செட் கலைப்பதற்கு முன் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன்.

‘அந்த மாதிரிப் படங்களில் எல்லாம் நடிக்க முடியுமா’ என்று ஏங்கினேன். அதைவிட பிரம்மாண்டமான செட்டுகளை எனக்காக என் படத்துக்காகப் பண்றாங்க. ஆனாலும் நான் செட்டுக்குப் போகும்போது அனுபவிக்க முடியாதபடி முகமெல்லாம் மேக்கப் போட்டு அது அரிக்குது. நீளமான டயலாக் பேச வைச்சி அதை அனுபவிக்க முடியாதபடி பண்ணிட்டாரு.

அப்படி கமல் சொல்லும்போது ஷங்கர் சாரி சொல்ல, இப்போ சாரி சொல்றாருன்னு சிரித்தபடி கமல் சொல்கிறார். அது இந்தப் பேட்டியைக் கூடுதலாக சுவாரசியப்படுத்தியது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்