அப்போ ‘விக்ரம் 2’ ஸ்வாஹாவா? விமான நிலையத்தில் கமல் கொடுத்த அப்டேட்
உலக நாயகனா சும்மாவா?: தமிழ் சினிமாவில் நம்பிக்கை மிகும் நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் கமல். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கலைத்துறையில் அவருடைய சேவை போற்றுதற்குரியதாக இருந்து வருகிறது. எத்தனையோ படைப்புகள், சாதனைகள், விருதுகள் என உலகமே போற்றும் உன்னத கலைஞனாக தன்னை இத்தனை வருட காலத்தில் நிலை நிறுத்திக்கொண்டார் கமல். சிவாஜிக்கு அடுத்த படியாக நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படும் நடிகராகவும் கமல் இருந்து வருகிறார்.
ரஜினிதான் மாஸ்: ஒவ்வொரு ப்ரீயடிலும் கமலின் பரிமாணம் மாறும். 80களில் இளசுகளை துள்ளல் போட வைத்த காதல் மன்னனாக 90களில் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த ஹீரோவாக அதன் பின் 2கே கிட்ஸுகளுக்கு உதாரணமாக விளங்கும் மாபெரும் ஆளுமையாக இருந்து வருகிறார் கமல். ரஜினிக்கு சீனியராக இருந்தாலும் ரஜினிக்கு இருக்கும் தற்போதைய ஓப்பனிங் கமல் படங்களுக்கு இருப்பது இல்லை.
விக்ரம் படம் கொடுத்த புகழ்: சொல்லப்போனால் அதிக படங்களில் நடித்தது, அதிக ஹிட் படங்களை கொடுத்தது என கமல் விளங்கினாலும் ரஜினிக்கு இருக்கும் கிரேஷ் கமலுக்கு இருப்பது இல்லை. தொடர்ந்து கமல் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் விக்ரம் திரைப்படம்தான் கமலுக்கு மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை பெற்றுக் கொடுத்தது. அந்தப் படம் பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் கமல்.
தக் லைஃப் ரிலீஸ்: அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கவும் முனைப்பு காட்டினார். சொல்லப்போனால் அதுவரை பாதாளத்தில் இருந்த கமல் விக்ரம் படத்திற்கு பிறகுதான் லைம் லைட்டில் வந்தார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தில் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்புவுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஏஐ தொழில் நுட்பம் பற்றி படிப்பதற்காக கமல் அமெரிக்கா சென்றிருந்தார். பல மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் கமல் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் கமலை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் விக்ரம் 2 படம் பற்றி கேட்டனர். அதற்கு கமல் ‘ நான் இப்போது வேறொரு ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.
