">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஹீரோவுடன் அட்ஜெஸ்ட் செய்த பிறகு கிடைச்சது – பாலிவுட்டின் பிம்பத்தை கிழித்த கங்கனா!
சூடுபிடிக்கும் ஜெயா பச்சன் – கங்கனா ரனாவத் மோதல்
சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு அது தொடர்பாக அவரது காதலியும் நடிகையுமான ரியாவிடம் விசாரணை மேற்கொண்டதில் போதை பொருள் கடத்தப்பட்டு சுஷாந்திற்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இந்த போதை பொருள் விவகாரத்தில் பாலிவுட்டை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பது பின்னர் தெரியவந்தது.
சுஷாந்த் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிகை கங்கனா பாலிவுட்டின் பல கருப்பு பக்கங்களை உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். அந்த வகையில் அண்மையில் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் போதை பொருள் கடத்தல் வழக்கு குறித்து ”ஒரு சிலரின் போதைப் பழக்கத்தால், மொத்த பாலிவுட் சினிமாவையும் அவதூறு சொல்லக் கூடாது. இது ‘உணவளித்த கையையே கடிக்கும்’ விதமாக உள்ளது. என காட்டம் தெரிவித்தார்.
ஜெயா பச்சனின் இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்த கங்கனா, ” பாலிவுட் சினிமா அப்படி என்ன கொடுத்துவிட்டது? ஐட்டம் பாடல், 2 நிமிட ரோல் அதுவும் ஹீரோவுடன் படுத்த பிறகு தான். என்னுடைய திரை வாழ்க்கையில் இதில் இருந்து தப்பிக்க நான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசபக்தி திரைப்படங்களில் நடித்து என் விதியை நானே மாற்றி அமைத்தேன். இதுவே ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா, துன்புறுத்தப்பட்டால் அல்லது மகன் அபிஷேக் கொடுமைப்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது பிணம் கண்டுபிடிக்கப்பட்டால் ஜெயா பச்சன் இப்படி பேசுவாரா? கொஞ்சம் கருணைகாட்டுங்கள் ஜி என்று ஆதங்கத்துடன் தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் கங்கனா.