பிரபல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு கடந்த மாதம் ஜூன் 27ம் தேதி வெளியான கண்ணப்பா திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூல் இல்லை என்பது படக்குழுவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எந்த நிகழ்ச்சியிலும் இப்படத்தின் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தனைப் பற்றி பேசாமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோகன் பாபு தயாரிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கிய புராண, பக்தி, காவிய திரைப்படமான கண்ணப்பா படத்தில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், பிரம்மானந்தம், மது, பிரம்மாஜி, முகேஷ் ரிஷி, ரகு பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஸ்டீபன் தேவஸ்ஸி இசையில் பான்-இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது.
இப்படம் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தின்னன் சிறு வயதில் நண்பனின் நரபலியை பார்த்து கடவுள் மீது நம்பிக்கை இழந்து நாத்திகனாக வளர்கிறார். பின்னர், அரக்கர் படையை எதிர்கொள்ளும் தின்னன், வாயு லிங்கத்தை காக்கிறாரா, கடவுள் மீது நம்பிக்கை பெற்று பக்தனாக மாறுகிறாரா என்பதே கதையின் மையயமாக கொண்டுள்ளது.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்கு பிறகு வேகமாக செல்கிறது, விஷ்ணு மஞ்சு தின்னனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், மூன்று மணி நேரம் கவனம் செலுத்தும் அளவிற்கு இல்லை என கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
மேலும், இப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாமல் இருந்தது, ப்ரீத்தியின் புகைப்படங்களை படக்குழுவினரும் விளம்பரப்படுத்தாமல் இருந்தது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அவருக்கு சம்பளம் சரியா கொடுக்கலையா, அல்லது படக்குழுவுடன் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரீத்தி முகுந்தன். பக்தி படம் என பார்க்க சென்ற பக்தர்களுக்கு ப்ரீத்தி முகுந்தன் கவர்ச்சி படையலை போட்டது எரிச்சலை உண்டாக்கியது தனிக்கதை.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…