Connect with us

latest news

சூட்டிங் ஸ்பாட்டுக்கு வராத நாகேஷ்… கோபம் பொங்க பாலசந்தர் செய்த காரியத்தைப் பாருங்க…

இயக்குனர் இமயம் பாலசந்தருடைய படங்களில் அறிமுகமாகும் நடிகர்கள் எல்லாருமே எளிதில் பாப்புலர் ஆகிவிடுவர். அவருக்குக் கோபம் வந்தால் அவ்வளவு தான்.

தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம்னு அழைக்கப்படுபவர் கே.பாலசந்தர். இவரது படங்கள் எல்லாமே அழுத்தமான கதைகளத்துடன் மாறுபட்ட கோணத்தில் வந்து வெற்றி வாய்ப்பைத் தட்டிச் செல்லும். இவரைப் பொறுத்த வரை கதை தான் இவருக்கு ஹீரோ.

அதனால் யாரை வேண்டுமானாலும் போட்டு நடிக்க வைப்பார். படம் பிரமாதமாக இருக்கும். அந்த வகையில் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷையே ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தவர் இவர் தான்.

சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி படங்களைப் பார்த்தால் தெரியும். நாகேஷிடம் இருந்து அற்புதமான நடிப்பை வாங்கி இருப்பார். இருவரும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்கள் தான். அப்படி இருக்கையில் இவர்களுக்குள் பெரிய சண்டையும் வந்திருக்கிறது. அது என்னன்னு தெரியுமா?

பாலசந்தர் வெள்ளி விழா என்ற படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன், மனோரமா, வாணிஸ்ரீ உள்பட பலர் நடித்து வந்தனர். இதே படத்தில் காமெடி ரோலில் நாகேஷூம் நடித்தார்.

ஒருநாள் படப்பிடிப்புக்கு எல்லாரும் வந்துவிட்டனர். ஆனால் நாகேஷ் மட்டும் வரவில்லை. புரொடக்ஷன் மேனேஜர் ஸ்டூடியோவுக்குள் வந்தார். நாகேஷை எங்கேன்னு கேட்டார் பாலசந்தர். இன்று எம்ஜிஆர் பட சூட்டிங் போயிட்டார்.

அதனால வர மாட்டார்னு சொல்லவும் இயக்குனருக்கு கோபம் கொப்பளித்தது. புரொடக்ஷன் மேனேஜர் நாகேஷ் வீட்டுக்குச் சென்ற போது எம்ஜிஆர் மேனேஜரே நேரடியாக வந்து அழைத்துள்ளார். நான் யாரிடம் போவது? நீயே சொல் என்று பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துள்ளார்.

கடும் கோபத்தில் இருந்த பாலசந்தர் அவரைத் தூக்கி விட்டு அந்த ரோலில் தேங்காய் சீனிவாசனை நடிக்க வைத்தாராம். படம் பிளாப். அதன்பிறகு இந்தப் பிரச்சனை காரணமாக நீண்டநாள்களாக நாகேஷ் உடன் ஒரு படத்தில் கூட பாலசந்தர் இணையவில்லை.

அதன்பின் அவராகவே வந்து தனது அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் இப்படி ஒரு மனசு அவருக்கு இருப்பதால் தான் இன்று வரை பேசப்படுகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top