கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி பண்ணிக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா. கேபிஒய் பாலா என கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் சுருக்கத்தை அடைமொழியாக கொண்டு விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களையும் சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் வரிசையில் தொகுத்து வழங்கி வந்தார்.
அடுத்த கட்டத்திற்கு நகர நினைத்த பாலா தான் சம்பாதித்த சம்பளத்தை மொத்தமாக கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து ஏகப்பட்ட ஆம்புலான்ஸ், ஆட்டோ, தையல் மெஷின், ஸ்கூட்டி, லேப்டாப் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை என வழங்கி கோலிவுட்டின் சோனு சூட் போலவே மாறினார்.
ராகவா லாரன்ஸ் பாலா செய்யும் நல்ல காரியங்களை பார்த்து அவருடன் இணைந்தும் அவருக்கு உறுதுணையாக இருந்தும் நலத்திட்ட உதவிகளை செய்வதில் துணையாக மாறினார். ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு லாரன்ஸ் மாஸ்டர் பல ஆண்டுகளாக உதவி செய்வது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
காமெடியனாக சில படங்களில் நடித்து வந்த பாலாவை இயக்குனர் ஷெரிஃப் ஹீரோவாக்கி புதிய படத்தை இயக்கி வருகிறார். “காந்தி கண்ணாடி’ என வித்தியாசமான டைட்டிலுடன் உருவாகியுள்ள அந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
காதல் படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சமீப காலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், பாலா படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
கேபிஒய் பாலா என அழைக்காமல், சீக்கிரமே ஹீரோ பாலா என மக்கள் அவரை கொண்டாட காத்திருக்கின்றனர். தீப்பந்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கர்ணன் பட தனுஷ் போல கிளிம்ப்ஸ் காட்சியில் பாலா நடித்து இருப்பது நல்லாவே இருக்கு.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…