">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அமைச்சருடன் சேர்ந்து கொரோனாவை கொண்டாடுவோம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்
கொரோனா பரிசோதனையை விரைவாக செய்ய உதவும் ரேபிட் கிட் கருவிகள் சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் வந்தது. அந்த கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விட முடியும். �
எனவே, அந்த கருவிகள் சென்னை, சேலம், கோவை என கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் வேலுமணி கொரோனா பரிசோதனை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா தொற்றில் பலரும் உயிரிழந்து நிலையில், ஏதோ விழா எடுப்பது போல் பரிசோதனை மையத்தை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பது சரியா? எதிலெல்லாம் விளம்பரம் தேடுவது என்பதில் வரையறை இல்லயா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரொனாவை @SPVelumanicbe அவர்களோடு சேர்ந்து கொண்டாடுவோம் pic.twitter.com/yxCE1kbZQM
— Savukku_Shankar (@savukku) April 18, 2020
"ரிப்பன் வெட்டி" திறந்த அதிமுக pic.twitter.com/Jtyfp3O1Cv
— Siva_KS ❤️ (@Sivaji_sk) April 19, 2020