1. Home
  2. Latest News

அடங்காத அஜித் குரூப்ஸ்.. கடைசில இப்படி இறங்கிட்டாங்க! இந்த மாதிரி பண்ணா வந்துருவாரா?


அஜித் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் சோசியல் மீடியாவில் பவர்ஃபுல்லான ரசிகர்களாக இருப்பவர்கள் இவர்கள்தான். ரசிகர்களுடன் நெருக்கமாக இல்லையென்றாலும் அவர்களின் நலனின் மீது அக்கறை கொண்ட நடிகராக இருக்கிறார் அஜித். ஏன் சமீபத்தில் கூட ரேஸில் வெற்றிபெற்ற பிறகு அவர் கொடுத்த பேட்டியில் உங்கள் குடும்பத்தை பாருங்க, விஜய் வாழனும் அஜித் வாழனும்னு சொல்ற நீங்க எப்போ வாழ போறீங்க என்றெல்லாம் பேசியிருந்தார்.

இது விஜய்க்கு எதிராக விமர்சனத்தை எடுக்க காரணமாக இருந்தது. ஏனெனில் விஜய் கட்சி ஆரம்பித்ததும் புஸ்ஸி ஆனந்த் உங்க வேலையை எல்லாம் விட்டு வாங்க என்று ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் கூறி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அஜித் அதற்கு நேர் எதிராக கூறியிருந்தார். இதுவே விஜய்க்கு ஒரு ப்ளாக் மார்க் விழுந்ததை போல அமைந்து விட்டது.

இப்படி அஜித்துக்கும் விஜய்க்கும் கருத்து ரீதியாக முரண்பாடு வரும் போது முதலில் சந்தோஷப்படுவது இவர்களின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். உடனே இணையதளம் பத்திக்கும் . எங்க தலைவன் பெருசு உன் தலைவன் பெரிய ஆளா என்றெல்லாம் முட்டி மோதிக் கொள்வார்கள். இதில் கெட்டவார்த்தைகளும் அதிகமாக இடம் பெறும். இதில் கூடுதலாக ஆக்ரோஷப்படுவது அஜித் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.

அஜித் தன் ரசிகர்களுடன் நெருக்கமாக இல்லாவிட்டாலும் அவர் மீது உயிரையே வைத்திருக்கும் அளவிற்கு அன்பை காட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில் மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் கவனம் ஈர்த்திருக்கிறது. மதுரை என்றாலே விஜயகாந்துக்கு அடுத்தபடியாக அஜித் கோட்டையாகத்தான் திகழ்கின்றது. அங்கு அஜித் குரூப்ஸ் என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் மதுரைக்கு அஜித்தை வரும் படி போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.



உங்களுக்காக ஒரு சீட் விட்டு வைக்கிறோம். எங்களுடன் திரையரங்கில் உட்கார்ந்து படம் பார்க்கும் படி அஜித்தை அழைத்து போஸ்டர் ஒட்டி வைரலாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அஜித்தை பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவர் மீதுள்ள பாசத்தால் இப்படி பண்ணுவது மற்றவர்களின் கேளிக்கை பார்வைக்கு ஆளாகியிருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.