">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஓடிடியில் மாஸ்டர் ரிலீஸ் –அமேசான் ப்ரைம் டிவீட்டால் குழப்பம்!
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பற்றி அமேசான் வெளியிட்ட டீவிட்டால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பற்றி அமேசான் வெளியிட்ட டீவிட்டால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
ஆனால் என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது. ஆனால் இன்று அதிகாலை அமேசான் தங்கள் ஆகஸ்ட் மாத வெளியீடுகள் பற்றி ஒரு டிவீட் போட்டது. அதில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால் இதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.
மேலும் ஏப்ரல் மாதமே மாஸ்டர் ரிலீஸ் ஆகியிருந்தால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கும். அதனால் தவறுதலாக பழைய அட்டவணையை மாற்றாமல் வெளியிட்டு இருப்பார்கள் என கூறியுள்ளனர். இதன் மூலம் விஜய் ரசிகர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது.