1. Home
  2. Latest News

சரோஜாதேவிக்கு ஆச்சரியம் தந்த எம்ஜிஆர்... பரிசு கொடுக்கறதுல இப்படி கூட ஒரு முறை இருக்கா?

புரட்சித்தலைவர் என்ற பெயரில் உள்ளதைப் போல நிஜத்திலும் செய்து அசத்துவார் எம்ஜிஆர். அப்படித்தான் அந்தப் படப்பிடிப்பிலும்...

வித்தியாசமான பரிசுகளைக் கூட நடிக்கிற நடிகர் நடிகைகளுக்குத் தந்து அவர்களை ஆச்சரியப்படுத்துவதில் எம்ஜிஆர் எப்படிப்பட்டவர் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

தாயைக் காத்த தனயன் படப்பிடிப்பு நடைபெற்ற போது வாஹினி ஸ்டூடியோவில் கண்காட்சி மாதிரி பல கடைகளைப் போட்டு இருந்தார்கள். அது ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்ததாலும் அங்கு பொதுமக்கள் வருவது குறைவு என்பதாலும் திரை நட்சத்திரங்கள் பலரும் அந்தக் கண்காட்சியில் உள்ள கடைகளுக்கு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனர்.

1962ல் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த படம் தாயைக் காத்த தனயன். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடி சரோஜாதேவி தான். தேவர் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது.

அப்போது அங்கு வந்த சரோஜாதேவி ஒரு கடையில் உள்ள அழகான நெக்லஸைப் பார்த்து இது என்ன விலை என கேட்டு அதை பேக் பண்ண சொன்னார். அதற்கு கடைக்காரர் அந்த நெக்லஸை வேறு ஒருவர் ஆர்டர் போட்டு வாங்கிட்டாங்கம்மா என சொல்கிறார்.

இது சரோஜாதேவிக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்த அதை மறைத்துக்கொண்டுஅங்கிருந்து வெளியேறினாராம். அதன்பிறகு தாயைக் காத்த தனயன் படத்தின் 100 வது நாள் விழா நடந்தது. அந்த விழாவில் எல்லாரும் பரிசுகளை வாங்கிக் கொண்டு இருந்தார்கள். சரோஜாதேவி முறை வந்த போது அவரும் பரிசு வாங்க மேடைக்குச் சென்றார்.

அப்போது அவருக்குப் பரிசுடன் சேர்;த்து ஒரு நகைப்பெட்டியையும் பரிசாகக் கொடுத்தனர். அதைத் திறந்து பார்த்த சரோஜா தேவிக்கு அவரது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அன்றைக்கு அந்த நெக்லஸை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியபோது எம்ஜிஆர் தான் அதை வாங்கிக் கொடுத்துள்ளார். அது கொஞ்ச நாள்கள் கழிந்ததும் தான் சரோஜாதேவிக்குத் தெரிந்தது. அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.