ரசிகர்களை மிரட்டும் ‘பிசாசு 2’ - மீண்டும் பேய்க்கதையை கையில் எடுத்த மிஷ்கின்....
ரசிகர்களை மிரட்டும் ‘பிசாசு 2’ - மீண்டும் பேய்க்கதையை கையில் எடுத்த மிஷ்கின்....
தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பபதால் இவருக்கேன தனி ரசிகர் கூட்டமே உண்டு.
சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யார் நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளது தெரியவந்துள்ளது.
இப்படத்தில் ஆண்டிரியா பேயாக நடிக்கவுள்ளாராம்.மேலும் சைக்கோ படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய ராஜ்குமார் பிச்சுமணி இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.