1. Home
  2. Latest News

இன்று வெளியாகும் மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு… எந்த படத்தின் பார்ட் 2 தெரியுமா?

இன்று வெளியாகும் மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு… எந்த படத்தின் பார்ட் 2 தெரியுமா?

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.

இன்று வெளியாகும் மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு… எந்த படத்தின் பார்ட் 2 தெரியுமா?

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.

நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின் அவருடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.  இதையடுத்து அவர் இயக்கத்தில் சிம்பு மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று மாலை அவர் இயக்கப்போகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அவர் ஏற்கனவே இயக்கிய பிசாசு படத்தின் பார்ட் 2 என சொல்லப்படுகிறது.